இதையும் படிக்க: அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்!
பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர்-எஸ் மற்றும் வேகன்-ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை கடந்த அட்டோபர் மாதத்தில் 80,662 வாகனங்களிலிருந்து 65,948-ஆக குறைந்துள்ளது.
மேலும் பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, எர்டிகா மற்றும் எக்ஸ்எல்-6 உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்கள் கடந்த மாதம் 70,644 வாகனங்களாக விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஈகோ வேன் பிரிவு வாகன விற்பனையானது கடந்த அட்டோபர் மாதம் 12,975 லிருந்து 11,653 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி 3,894-லிருந்து 3,539-ஆகவும் உள்ளது.
கடந்த ஆண்டு அட்டோபர் மாதத்தில் 21,951 வாகனங்களாக இருந்த மாருதி சுசூகியின் விற்பனை நடப்பு அட்டோபரில் அதிகரித்து 33,168 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.