அண்ணா பல்கலை. சம்பவம்: அமித் ஷாவிடம் அறிக்கை கொடுப்போம் – டெல்லி புறப்பட்ட அண்ணாமலை தகவல் | Let’s Report to Amit Shah: Annamalai information Leaving Delhi

1344997.jpg
Spread the love

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அறிக்கை கொடுக்க இருக்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவோம். அவரிடம் அறிக்கையும் தருவோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் மூலம் இடைக்கால நியாயம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. சாட்டையடி தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட்டதற்காக, உடனடியாக ரூ.25 லட்சம் நஷ்ட ஈடாக தர வேண்டும். 3 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். வரும் 30-ம் தேதி தேசிய பெண்கள் ஆணைய குழுவினர் சென்னை வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிக்குவார்கள்.

இந்த விவகாரத்தில் நிறைய மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் கருத்துகளுக்கு உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து உத்தரவிட்டிருப்பது நம்பிக்கையை ஏற்பட்டுத்தியுள்ளது. திருமாவளவன் தமிழகத்தில்தான் இருக்கிறாரா அல்லது ஆகாஷா போன்ற நாட்டில் வாழ்கிறாரா என்று சந்தேகமாக உள்ளது.

சமீபத்தில் அவர் பேசும் எதுவும் பிடிக்கவில்லை. நல்ல அரசியல் தலைவரை திமுக பேச வைக்கிறதை நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. மாணவி விவகாரத்தில் நடந்த தவறுகளை திருமாவளவன் முதல் ஆளாக வந்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், திமுகவுக்கு திருமாவளவனின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதை பார்த்தால்தான் கோபம் வருகிறது. பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது கருத்து வேறுபாடு கிடையாது. கருத்து பரிமாற்றம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *