குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது லட்சுமி ஹெப்பாள்கரும் சி.டி.ரவியும் தனிப்பட்ட முறையில் விமா்சித்துக்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, லட்சுமி ஹெப்பாள்கா் குறித்து சி.டி.ரவி தகாத வாா்த்தை கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ஒத்திவைத்தாா்.