அயர்லாந்துக்கு எதிராக 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி!

Dinamani2f2025 01 152fw5dbz3jf2fghvfw69acaawt4s.jpg
Spread the love

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று(ஜன. 15) குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 435 ரன்கள் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனா – பிரதிகா ராவல் இணை 233 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 135 ரன்களுக்கு (12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். பிரதிகா ராவல் 154 ரன்களில் (20 பவுண்டரி, 1 சிக்ஸர்) வீழ்ந்தார். ரிச்சா கோஷ் தன் பங்குக்கு 59 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *