இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த மசோதாவை மாநில அரசு அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்பில் இடமில்லை எனக் கூறி இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சில அடிப்படைவாதிகளுடன் சமாதானம் செய்துகொள்ளும் நோக்கத்தில் இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்தது.
இந்நிலையில், ஒப்புதல் பெறுவதற்காக குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!