அல்லு அர்ஜுன் தனித்துவிடப்பட்டது சரியல்ல: பவன் கல்யாண்

Dinamani2f2024 12 302fzdf884jm2fpawan Kalyan Speech Edi.jpg
Spread the love

புஷ்பா – 2 திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் தனித்துவிடப்பட்டது சரியானதல்ல என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

காவல் துறையை தான் குறை கூறவில்லை என்றும், திரைத் துறை சார்ந்து தெலங்கானா முதல்வரின் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரின் 8 வயது மகன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக பவண் கல்யாண் பேசியுள்ளார். ஆந்திர மாநிலம் மங்களகிரியில் செய்தியாளர்களுடன் பவன் கல்யாண் பேசியதாவது,

”சட்டம் அனைவருக்கும் சமம், இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையை நான் குறை கூறவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள்.

தியேட்டர் ஊழியர்கள் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் முன்பே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் இருக்கையில் அமர்ந்தவுடன், தேவைப்பட்டால் காலி செய்யுமாறு அறிவுறுத்தியிருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுனை மட்டுமே பொறுப்பாக்குவது சரியல்ல.

புஷ்பா படக் குழுவில் இருந்து தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் என யாராவது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். தேவையான உதவிகளை செய்திருக்க வேண்டும். பட வெற்றியை கொண்டாடுவதோடு மட்டும் இருக்கக் கூடாது.

இதுபோன்ற சூழல்களில் நான் காவல் துறையை குறை கூறவில்லை. அவர்களின் முன்னுரிமை மக்களின் பாதுகாப்புதான். சமீபத்தில் என்னுடைய விசாகப்பட்டினம் சந்திப்பின்போதும் காவல் துறை அதிகாரி ஒருவர், என் பாதுகாப்புக்காக என்னை முன்னாடி நிற்கச் சொன்னார்.

ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டு

பாதுகாப்பு காரணங்களுக்காக நான் திரையிடலுக்குச் செல்வதில்லை. ரசிகர்களிடமிருந்து நேரடியாக பாராட்டுகளைப் பெறுவது அற்புதமானதுதான், ஆனால் அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னோடியான தலைவராக உயர்ந்து வருகிறார். அல்லு அர்ஜுனை குறிவைத்து அவர் செயல்படுகிறார் என்ற வாதம் ஏற்புடையதல்ல. தெலங்கானா மாநில சினிமா கொள்கைகளுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார். இது பாராட்டத்தக்கது. முன்பு இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைப் போன்று ரேவந்த் ரெட்டி நடந்துகொள்ளவில்லை” எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *