ஆம்பூர் அருகே மேம்பால கட்டுமானப் பணியின்போது விபத்து: 3 தொழிலாளர்கள் படுகாயம் | flyover construction collapsed near Ambur three Workers injured

1314563.jpg
Spread the love

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் சாரம் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

இந்த விபத்தை அடுத்து அங்கிருந்த பிற தொழிலாளர்கள் மற்றும் மக்கள் இணைந்து காயமடைந்த தொழிலாளர்கள் மீட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *