நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் (21) தனது அறிமுகப் போட்டியிலேயே அரைசதமடித்து அசத்தினார்.
தற்போது, ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணியின் 2 வருட மத்திய ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது 2026 செப்டம்பர் வரை இங்கிலாந்துக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
A Test squad call-up! @BethellJacob will be on the plane to New Zealand #NZvENG | #EnglandCricket pic.twitter.com/Ay7dVbm8pS
— England Cricket (@englandcricket) October 29, 2024
ஜேக்கப் பெத்தேல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஆர்ச்சர்
இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கர்ஸ், மேத்திவ் பாட்ஸ் ஆகியோருக்கும் செப்.2026வரை ஒப்பந்தம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்.2021 முதல் ஆர்ச்சர் (29) டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை. இருப்பினும் அவருக்கும் ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது.
இதுவரை 13 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடி 42 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அக்.2025 உடன் ஆர்ச்சரின் கடந்தகால ஒப்பந்தம் நிறைவுபெற இருக்கிறது. ஐபிஎல் 2025இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவிருக்கும் ஆர்ச்சர் இங்கிலாந்துக்காகா இந்தியாவுடன் டெஸ்ட், ஆஷஸ் டெஸ்ட்டும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:
ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகவும் குறைவாக பேசக் கூடியவர். வாட்ஸ்ஆப்பிலும் அப்படிதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜிம்பாப்வே? எனக் கேட்டிருந்தார். இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். ஜோஃப்ரா விளையாட வந்தது மகிழ்ச்சியான செய்தி.
அவர் மீண்டும் இங்கிலாந்து அணியின் சீறுடையை அணிவதை நினைத்து பார்த்திருக்கமாட்டார். காயம், அறுவை சிகிச்சைகள் ஒருவரின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டிருக்கும். அதனால் விரைவாக வரவேண்டுமென நினைக்கவில்லை.
பென் ஸ்டோக்ஸ் அறிவுரை
இசிபி நிர்வாகத்தினால் ஜோஃப்ரா சிறப்பாக கையாளப்பட்டார். தற்போது, உடல்நலமுடன் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் அழுத்தத்தை தாங்கும்படி உடலை தயார்படுத்தி வருகிறார்.
நீண்ட நாள் விளையாடும்படி அவரது உடலை தயார்படுத்த வேண்டும். அவரை தேர்ந்தெடுந்தவர்களுக்கும் அவருக்கு இது குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கும். அதனால் அவருக்கு அழுத்தம் அதிகரித்திருக்கும். ஒருநாள் போட்டிகளில் 2, 3 வித்தியாசமான ஸ்பெல்களில் பந்துவீசலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் பந்துவீச வேண்டியிருக்கும். அடுத்தநாள் மீண்டும் விளையாட வேண்டும். தற்போது நலமுடன் இருந்தாலும் டெஸ்ட் போட்டிக்கான அழுத்தத்தை தாங்கும் அளவுக்கு அவர் தனது உடலை பராமரிக்க வேண்டும் என்றார்.