ஆஸ்கர் விருது வென்ற கோகோ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
2017ஆம் ஆண்டு வெளியான ’கோகோ’ என்ற நகைச்சுவைக் கலந்த டிராமா அனிமேஷன் படத்தை லீ எட்வர்ட் உன்கிரீஷ் இயக்கியிருந்தார்.
டிஸ்னி, பிக்சர் சார்பாக டார்லா கே ஆண்டர்சன் தயாரித்த இந்தப் படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
தற்போது, இந்தப் படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருப்பதை டிஸ்னி சிஇஓ பாப் இகர் உறுதிப்படுத்தியுள்ளார்.