இணையவழி பட்டா மாறுதல் ‘தமிழ் நிலம்’ இணையதளம் 31-ம் தேதி வரை இயங்காது | Tamil Nilam website will not work till 31st

1344889.jpg
Spread the love

சென்னை: இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் இணையதளம் வரும் டிச.31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவை வழங்கப்படும் ‘தமிழ்நிலம்’ இணையதளத்தில் விவசாயிகள் விவரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக இன்று (டிச.28) காலை 10 மணி முதல் 31-ம் தேதி மாலை 4 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் ‘தமிழ்நிலம்’ இணையதளமான https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html இணையதளங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *