இது எனது ஊர், எனது திடல்..! வைரலாகும் கே.எல்.ராகுலின் வெற்றிக் கொண்டாட்டம்!

Dinamani2f2025 04 112fxupl0qqa2fkl Rahu.jpg
Spread the love

பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி உடனான போட்டியில் வென்றதற்கு பிறகு தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலின் கொண்டாட்டம் வைரலாகி வருகிறது.

சின்னசாமி திடலில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல்-இன் 24ஆவது போட்டியில் ஆர்சிபியை தில்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பெங்களூருவைச் சேர்ந்த கே.எல்.ராகுலை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தில்லி அணிக்காக தற்போது விளையாடிவரும் கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முதலில் பொறுமையாக ஆடிய ராகும் கடைசி நேரத்தில் மழை தூரல் வந்ததும் மிக அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தார்.

வெற்றிக்கான ரன்களை அடித்துவிட்டு இந்தத் திடல் எனக்குச் சொந்தமானது என்பதுபோல பேட்டினால் சைகை காண்பிப்பார். பின்னர் இது எனது ஊர் எனவும் நான் தான் இங்கு அடிப்பேன் என்பதுபோலவும் சைகை காண்பிப்பார்.

இந்தக் கொண்டாட்டம் வைரல் ஆகி வருகிறது. போட்டி முடிந்தபிறகு ராகுல், “இது எனது திடல். எனது ஊர். என்னைவிட இங்கு யாருக்கும் இந்த பிட்ச் குறித்து தெரியாது. இங்கு விளையாடியது மகிழ்ச்சி” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *