இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

Dinamani2f2025 04 152ftqzocit42fmotorola Edge 60 Stylus.jpg
Spread the love

மோட்டரோலா நிறுவனம் தனது புதிய எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸின் விலையானது ரூ.22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பு கொண்டது. இது பான்டோன் ஜிப்ரால்டர் சீ (Pantone Gibraltar Sea) மற்றும் பான்டோன் சர்ஃப் தி வெப் (Pantone Surf the Web) ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மொபைல் ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மோட்டோரோலா இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.

இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 2 எஸ்.ஓ.சி, 68W வயர்டு மற்றும் 15 வாட் – வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மற்றும் 50-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன் வருகிறது.

உள்கட்டமைைக்கப்பட்ட ஸ்டைலஸுடன் கூடிய பிரிவில், முதல் ஸ்மார்ட்போன் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பேசியில் கார்னிங் கொரில்லா 3 டிஸ்ப்ளே பாதுகாப்பு, எம்.ஐ.எல் – எஸ்.டி.டி-810 எச் நீடித்த உழைப்பு சான்றிதழ் மற்றும் ஐபி68 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறன் கொண்ட வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

செயல்திறன்

  • குவால் காம் ஸ்னாப்டிராகன் 7 எஸ் 2-வது தலைமுறை சிப்

  • ஆக்டா கோர் (2.4 கிகா ஹெர்ட்ஸ், க்வாட் கோர் + 1.8 ஜிகாஹெர்ட்ஸ், க்வாட் கோர்)

  • 8 ஜிபி ரேம்

டிஸ்ப்ளே

  • 6.67 இன்ச் (16.94 சென்டிமீட்டர்) பி-ஓஎல்ஈடி வகையை செர்ந்தது

  • 1220 x 2712 பிக்சல்கள் (எஃப் எச் டி பிளஸ்)

  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

  • கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

பின்புற கேமரா

  • மூன்று கேமரா கொண்ட அமைப்பு

  • 50 எம்பி வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா

  • 13 எம்.பி. அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா

எல்ஈடி ஃபிளாஷ்

  • 4கே@30எஃப்.பி.எஸ் விடியோ ரெக்கார்டிங்

முன்புற கேமரா

  • 32 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ்

  • 4கே@30எஃப்.பி.எஸ் விடியோ ரெக்கார்டிங்

பேட்டரி

  • 5000 எம்எஎச் வகையை சேர்ந்தது

  • 68 வாட் டர்போ பவர் சார்ஜிங்; யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

பொதுவானது

  • சிம் 1: நானோ, சிம்2: இ-சிம்

  • 5ஜி போன்

  • 256 ஜிபி சேமிப்புதிறன், 1 டிபி வரை விரிவாக்கம்

  • தூசி எதிர்ப்பு, நீர் எதிர்ப்பு திறன் கொண்டது.

ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் மோட்டரோலா எட்ஜ் 60 ஒரு ஸ்டைலான சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் பயனுள்ள ஸ்டைலஸ் பேன் ஆகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *