இந்தியாவுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடத்தப்படுகிறதா?

Dinamani2f2024 11 072fr4hkwqgy2ftnieimport20211116originalicccttrophy.avif.avif
Spread the love

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் விளையாட ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென ஆர்வம் காட்ட காரணம் என்ன?

ஹைபிரிட் மாடல்

இந்தியாவுக்கான போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட அனுமதி அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கான போட்டிகளை துபை அல்லது ஷார்ஜாவில் நடத்த தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கராச்சியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி மார்ச் 9 ஆம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: இங்கிலாந்து – நியூசி. டெஸ்ட் தொடர்: நியூசி.யின் வெற்றிநடை தொடருமா?

இந்தியாவுக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டாலும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *