இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலளித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில், பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் “காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை, அவர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் தொடர்ந்து மீறப்படுவதுடன், மனித உரிமைகளும் மீறப்படுகிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.
இதனையடுத்து, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் பிரதிநிதியான க்ஷிதிஜ் தியாகி, காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. அவையில் மீண்டும் மீண்டும் எழுப்புவதற்காக பாகிஸ்தானை விமர்சித்தார்.
தொடர்ந்து, தியாகி கூறியதாவது “பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்பும் பாகிஸ்தான் அதிகாரிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.