இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- எடப்பாடி பழனிசாமி

Dinamani2f2025 02 082f9luaesp52feps.jpg
Spread the love

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு இடைத்தேர்லில் திமுக பெற்றது வெற்றி கிடையாது, போலி வெற்றி. யாருமே களத்தில் கிடையாது.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்கிற மமதையில் திமுகவினர் உள்ளனர்.

2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கில் அதிமுக கூட்டணியை அமைக்கும். கூட்டணி என்பது வாக்கு சிதறாமல் அனைத்துக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது ஆகும். கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த வேண்டும்.

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

எங்கள் எதிரி திமுகதான். அந்த அடிப்படையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

தில்லியில் உள்ள மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள். அதானல் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். தில்லி தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கட்சி பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *