இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

Dinamani2f2025 01 082f5jc1zan02fkangana.jpg
Spread the love

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே எழுதி இயக்கி நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.

சீக்கியர்கள் பிரச்னைகளால் இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாமல் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது, ஜன.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரணாவத் வென்றார்.

இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்தும் பேசியுள்ளார். கங்கனா பேசியதாவது:

எமர்ஜென்சி படத்தைப் பார்ப்பாரா பிரியங்கா காந்தி?

நான் பிரியங்கா காந்தியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். அவர் என்னுடைய வேலைகளையும் எனது தலைமுடியையும் பாராட்டிப் பேசினார். அப்போது நான் ‘எமர்ஜென்சி’ என்ற படம் எடுத்திருக்கிறேன். நீங்கள் பார்க்க வேண்டும்’ என்றேன்.

அதற்கு அவர், ’சரி. அநேகமாக பார்ப்பேன்’ என்றார்.

பலவீனமானவர் இந்திரா காந்தி

பலவீனமாக இருப்பவர்களே மற்றவர்களை அதிகமாக கட்டுப்படுத்த வேண்டுமென நினைப்பார்கள் என்பதை நான் செய்த ஆராய்ச்சியில் மேலும் திடமாக நம்பினேன்.

இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவர். தன்னம்பிக்கை இல்லாதவராகவும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவராகவும் இருந்திருக்கிறார். அவரைச் சுற்றி பல ஊன்றுகளை வைத்திருந்தார். எப்போதும் தனது செயலுக்கு ஒப்புதல் தேடுபவராகவும் இருந்துள்ளார்.

இந்திரா காந்தி பலரை மிகவும் நம்பியிருந்தார். அதில் சஞ்சய் காந்தியும் ஒருவர். எமர்ஜென்சி படத்துக்கு முன்பு எனக்கு இந்திரா காந்தி மீது எந்த விதமான பச்சாதாபம் இல்லை என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *