அத்திக்கடவு – அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தாவது, அத்திக்கடவு – அவிநாசி திட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மூன்று நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார்கள்.
அப்போது அவர்களிடம், எங்களை உருவாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவப் படங்கள் பேனர்களில் இல்லை. எங்களிடம் கலந்தாலோசித்திருந்தால் நான் அதை உங்கள் கவனித்திற்கு கொண்டு வந்திருப்பேன் என்றேன்.
அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011இல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.