இயக்குநர் பா. இரஞ்சித் மீது பெண் வழக்குரைஞர் புகார்!

Dinamani2f2024 072f585c647b 7420 4dc5 A752 7eb9686b663f2fparanjith1.jpg
Spread the love

தங்கலான் படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித் மீது பூவிருந்தவல்லி நீதிமன்ற வழக்குரைஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் ஆக. 15-ல் உலகளவில் வெளியானது.

கோலார் தங்கச் சுரங்கம், தங்கத்துக்கு யார் சொந்தக்காரர்கள் என்று பூர்வகுடிகளின் கதைகளப் பற்றி பேசியுள்ளது தங்கலான்.

இந்தப் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி நடித்துள்ளார்கள். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் தொடர்பாக பா. இரஞ்சித் மீது பெண் வழக்குரைஞர் பொற்கொடி புகார் அளித்துள்ளார்

அவர் அளித்த புகாரில், “புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில், தங்கலான் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் மற்றும் இரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *