தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த அக். 14, 2023 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை 10 நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.
நாகை – காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் 2024 ஆகஸ்ட் 16 அன்று தொடங்கியது. இந்த நிலையில், இந்தப் படகு சேவை வானிலை காரணமாக நவ. 19 முதல் டிச. 18 வரை நிறுத்தப்படும் என்று கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.