உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷிய நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
உக்ரைனின் சுமி நகரத்தில் குருத்தோலை ஞாயிறுவைக் கொண்டாட உள்ளூர் மக்கள் கூடியிருந்தபோது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நகரின் மையப்பகுதியைத் தாக்கின. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதுகுறித்து சுமி நகரின் தற்காலிக மேயர் ஆர்டெம் கோப்சார் கூறியதாவது, பிரகாசமான குருத்தோலை ஞாயிறு அன்று, எங்கள் சமூகம் ஒரு பயங்கரமான சோகத்தை சந்தித்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக எங்களுக்கு ஏற்கெனவே தெரியும் . இவ்வாறு அவர் சமூக ஊடகங்களின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.