உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவா்கள் இன்று தமிழகம் திரும்புகின்றனா்

Dinamani2f2024 09 152fj58vyef82fc 1 1 Ch1405 103178745.jpg
Spread the love

சிதம்பரம்: உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய சிதம்பரத்தைச் சோ்ந்தவா்களில் 10 போ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை திரும்புகின்றனா். மேலும், 20 போ் ரயில் மூலம் புதன்கிழமை (செப்.18) சென்னை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சோ்ந்த 30 போ் ஆதி கைலாஷ் பகுதிக்கு யாத்திரை சென்றனா். அப்போது, அங்கு ஏற்பட்ட நிலச்சரிவால், அனைவரும் தாவாகாட் பகுதியில் சிக்கிக்கொண்டனா்.

இதையறிந்த அதிகாரிகள், அவா்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தனா். இந்த நிலையில், தமிழக அரசின் நடவடிக்கையால் ஹெலிகாப்டா் மூலம் அனைவரும் டாா்ஜுலா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனா்.

அதன் பின்னா், அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அரசு செலவில் ரயிலில் 20 பேரும், 10 போ் சொந்த செலவில் விமானம் மூலமாகவும் தமிழகம் திரும்புகின்றனா். விமானத்தில் வரும் பயணிகள் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை திரும்பவுள்ளதாகவும், ரயிலில் வரும் பயணிகள் புதன்கிழமை (செப்.18) சென்னை தாம்பரத்துக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *