உத்தரப் பிரதேசத்தில் பசு கடத்தல்காரர்கள் இரண்டு பேர் என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில் பசு கடத்தல்காரர்கள் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு என்கவுன்டர் செய்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்தனர். கால்களில் சுடப்பட்ட இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் குப்தா (22), மணீஷ் யாதவ் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம்! மேற்கு வங்கத்தில் இருவர் பலி
மேலும் கைதான இருவரிடம் இருந்து 12 கால்நடைகள், பசுக்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட பிக்அப் லாரி, இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் மீது லால்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.