அலுவலக சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ. எனும் செய்யறிவு தொழில்நுட்பங்கள் கொண்ட செயலிகள்/கருவிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
ஏனெனில் ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது, அரசு ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு அபாயங்களை ஏற்படுத்தலாம் என்று விளக்கம் தெரிவித்துள்ளது.