எக்ஸ் செயலியை வாங்குவதில் முறைகேடு! எலான் மீது வழக்கு!

Dinamani2f2025 01 162ffb2a5qk62ftnieimport2023106originalelonmusk.avif.avif
Spread the love

எக்ஸ் செயலியை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) குற்றம் சாட்டியுள்ளது.

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டில், சமூக ஊடகமான ட்விட்டர் செயலியை வாங்கப்போவதாக 2022, ஏப்ரல் 4 ஆம் தேதியில் அறிவித்தார். இதனையடுத்து, ட்விட்டர் செயலியின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்துக்கும்மேல் உயர்ந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே, ட்விட்டரின் 5 சதவிகிதப் பங்குகளை வாங்கியிருந்தார். அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கினாலோ வைத்திருந்தாலோ, அதுகுறித்த தகவலை 10 நாள்களுக்குள் சட்டபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரின் பங்குகளை வாங்கிய 11 நாள்களுக்குப் பின்னர்தான் அறிவித்தார்.

இதையும் படிக்க: ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது! அதானி குழுமத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அமைப்பு!

இந்த தாமதமான அறிவிப்பின் மூலம் 150 மில்லியன் டாலர் குறைவாகச் செலுத்தி, குறைந்த விலையில் ட்விட்டர் வாங்க வழிவகுத்தது. இருப்பினும், ட்விட்டர் பங்குகளை வைத்திருந்த மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்இசி கூறியது.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் மீது வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *