எமிஸ் தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது: பள்ளிக்கல்வி துறை உத்தரவு | Teachers should not given task of uploading on EMIS site school education

1300614.jpg
Spread the love

சென்னை: எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது என்றுபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் நேர்முக உதவியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்விஅலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

முக்கியமாக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும்போதுகற்றல் – கற்பித்தல் பணிகளுக்குபெரும் இடையூறு ஏற்படுவதாகதெரியவருகிறது. எனவே, ஆசிரிய ரல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பணிகளை பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் இதுவரை 100 சதவீதம் முழுமையாக விவரங்கள் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் அரசு செயலரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *