எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்படுத்தியவர் ஜானகி: நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இபிஎஸ் புகழாரம் | EPS speech in Janaki Centenary Event

1340934.jpg
Spread the love

சென்னை: எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்​படுத்​தி​யவர் ஜானகி என அவரது நூற்​றாண்டு விழா​வில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி புகழாரம் சூட்​டி​னார்.​

அதிமுக சார்​பில் முன்​னாள் முதல்வர் ஜானகி நூற்​றாண்டு விழா நேற்று நடைபெற்​றது. இதில் எம்ஜிஆர் ​ஜானகி ஆகியோரின் அறிய புகைப்​படங்கள் இடம்​பெற்ற கண்காட்​சியை பழனிச்​சாமி, திறந்து வைத்​தார். பின்னர் ஜானகி, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்​களுக்​கு மலர் தூவி மரியாதை செலுத்​தினார்.

ஜானகி​யுடன் திரைத்​துறை​யில் பயணித்த ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்​மலா, சச்சு, ஜெயசித்ரா, குட்டி பத்மினி ஆகியோ​ருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுர​வித்​தார். பின்னர் திரைத்துறை​யில் எம்ஜிஆர் ஜானகி சந்திப்பு முதல் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கை​யில் உறுதுணையாக ஜானகி இருந்தது மற்றும் அவர் முதல்​வ​ராகி, கட்சியை ஜெயலி​தா​விடம் ஒப்படைத்தது வரையிலான நிகழ்வுகளை விளக்​கும் குறும்​படம் திரை​யிடப்​பட்​டது. அதனைத் தொடர்ந்து ஜானகி​யின் குடும்பத்​தினர் சுதா விஜயகு​மார் உள்ளிட்​ட​வருடன் குழு புகைப்​படம் எடுத்​துக் கொண்​டார்.

நிகழ்ச்​சி​யில், ஏஐ தொழில்​நுட்​பத்​தில் எம்ஜிஆர் வாழ்த்து தெரிவிக்​கும் காணொளி​ ஒளிபரப்​பப்​பட்​டது. அதில் பழனிசாமி சிறப்பாக அதிமுகவை வழிநடத்தி செல்​வதாக எம்ஜிஆர் பாராட்​டுகிறார். நிறைவாக பழனிசாமி பேசி​ய​தாவது: எம்ஜிஆருக்கு சேவை செய்ய தன்னையே அர்ப்​பணித்​துக் கொண்​டவர் ஜானகி. அவரின் எண்ணங்களை செயல்படுத்தியவர். கருணாநி​தி​யால் பல்வேறு சோதனைகளை எம்ஜிஆர் சந்தித்​தபோதெல்​லாம் அவருக்கு பக்கபலமாக இருந்த காரணத்​தால் எம்ஜிஆர் தொட்​டதையெல்​லாம் வென்​றார்.

அதிமுகவை முடக்க நினைப்​பவர்கள் எண்ணம் நிறைவேறாது. எந்த ஒரு கட்சி​யும் தொடர்ந்து வெற்றி பெற்​ற​தாக​வும், தொடர்ந்து தோல்​வி​யுற்​ற​தாக​வும் வரலாறு இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி வந்து கொண்​டிருக்​கும். அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாக பலர் பேசுகின்​றனர். திமுக 10 ஆண்டுகள் தொடர் தோல்​வியை சந்திக்க​வில்​லையா, 1991 தேர்​தலில் 2 இடங்​களில் மட்டுமே வென்ற திமுக 1996-ல் ஆட்சிக்கு வரவில்​லையா, கால சூழல், அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதிமுகவை பொறுத்​தவரை வெற்றி நிச்​ச​யிக்​கப்​பட்டு​விட்​டது.

அதிமுகவை யாராலும் அழிக்க முடி​யாது. அதிமுக ஒரு குடும்ப கட்சி. திமுக கருணாநிதி குடும்ப கட்சி. அந்த குடும்பத்​தில் இருப்​பவர் மட்டும்​தான் கட்சிக்கு தலைவ​ராக​வும், ஆட்சி அதிகாரத்​துக்​கும் வர முடி​யும். அதிமுக குடும்பத்​தில் யார் உழைக்​கிறார்​களோ, யார் விசுவாசமாக இருக்​கிறார்களோ அவர்கள் எம்எல்ஏ, எம்.பி., ஏன் முதல்​வராக கூட ஆகலாம். இதுதான் அதிமுக​வுக்​கும் திமுவுக்​கும் இடையே உள்ள வேறு​பாடு. சட்டப்​பேரவை தேர்​தலுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் உழைப்​போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்​சி​யில் அவைத் தலைவர் தமிழ்​மகன் உசேன், முன்​னாள் அமைச்​சர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்​வநாதன், கே.பி.​முனுசாமி, திண்​டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்​கமணி, கே.ஏ.செங்​கோட்​டையன், சி.வி.சண்​முகம், சி.விஜயபாஸ்​கர், ​எம்.ஆர்.விஜயபாஸ்​கர், ஆர்.பி.உதயகு​மார், ஜெயக்​கு​மார், தம்​பிதுரை, செம்​மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரிய மனதுடன் அரசி​யலில் இருந்து விலகியவர் ஜானகி: ரஜினி

சென்னையில் நடந்த ஜானகி நூற்றாண்டு விழாவில் காணொலி மூலம் நடிகர் ரஜினியின் வாழ்த்து ஒளிபரப்பப்பட்டது அதில் பேசிய ரஜினி, “எம்ஜிஆரும், ஜானகி​யும் இணைந்து நடிக்​கும்​போது ஜானகி முன்னணி நட்சத்​திரம். எம்ஜிஆர் அப்போது தான் கதாநாயகன் ஆகிறார். அப்போதே எம்ஜிஆர் சாதாரண மனிதர் இல்லை, மாமனிதர், மிகப்​பெரிய நடிகர் ஆவார் என கணித்து திரை வாழ்க்கை​யில் உச்சத்​தில் இருந்த​போது, அதை தியாகம் செய்து, எம்ஜிஆரை காதலித்து மணந்​தார். அவரை கடைசிவரை சந்தோஷமாக பார்த்​துக் கொண்​டார். இப்போது அதிமுக தலைமை அலுவல​கமாக இருப்பது ஜானகி​யின் சொந்த

உழைப்​பில் சம்பா​தித்த பணத்​தில் வாங்​கியது. அவர் அரசி​யலுக்கு வந்தது விபத்து. அதில் அவருக்கு கொஞ்சம் கூட ஈடுபாடும் விருப்​ப​மும் இல்லை. ஜானகி யாருடைய ஆலோசனையை​யும் கேட்​காமல் அவரே முடி​வெடுத்து பெரிய மனதுடன் அரசி​யலில் இருந்து விலகியதுடன், ஜெயலலி​தாவிடம் அதிமுகவை ஒப்படைத்​தார். அது எவ்வளவு பெரிய குணம்” இவ்வாறு பேசினார். இதேபோல், தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா விஜய​காந்த், ​திரை துறை​யினர் லதா, பிரபு, தேவா, பி.வாசு, ​விந்தியா, க​வுதமி ஆகியோரின் வாழ்த்து ​காணொளி​களும் நிகழ்ச்சியில் ஒளிபரப்​பப்​பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *