எம்புரான் – சில காட்சிகள் நீக்கம்!

Dinamani2f2025 03 292f5ezqwkl82fgnbjcwubuaaf5ya.jpg
Spread the love

எம்புரான் திரைப்படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் – பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதனால், முன்பதிவிலேயே பல சாதனைகளை படைத்த எம்புரான் முதல்நாளில் உலகளவில் ரூ.50 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து, 48 மணி நேரத்துக்குள்ளாகவே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், விமர்சன ரீதியாக இப்படம் கலவையான வரவேற்பையே பெற்றுள்ளது. இதனால், எம்புரானில் இடம்பெற்ற காட்சிகளில் 17 இடங்களில் கட் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

அதன்படி, திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் எம்புரானின் புதிய வடிவம் திரையிடப்பட உள்ளதாகத் தகவல்.

இதையும் படிக்க: நாயகனாகும் விஜே சித்து!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *