எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!

Dinamani2f2025 04 032f0edmp6tc2fap25092722963842.jpg
Spread the love

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா அணி அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 1 ஆட்டத்தில் 4-4 என சமைநிலையில் இருக்க லெக் 2 ஆட்டத்தில் 1-0 என பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது.

27ஆவது நிமிஷத்தில் ஃபெர்ரன் டோரஸ் கோல் அடித்தார். அத்லெடிகோ மாட்ரிட் எவ்வளவு முயற்சித்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

அத்லெடிகோ மாட்ரிட் ஆஃப் சைடில் ஒரு கோல் அடித்து வீணானது.

மொத்தமாக 5-4 என பார்சிலோனா அணி அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில் எல் கிளாசிக்கோ

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் உடன் பார்சிலோனா மோதுகிறது.

இந்த ஆண்டு மட்டும் இது 2ஆவது இறுதிப் போட்டியாகும். ஏற்கனவே, ஜனவரியில் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் 5-2 என பார்சிலோனா ரியல் மாட்ரிட்டை வென்றது.

கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் பார்சிலோனா வென்றுள்ளன.

ஸ்பானிஷ் கோப்பை வரலாற்றில் பார்சிலோனா 31 முறையும் ரியல் மாட்ரிட் 20 முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *