ஐபிஎல் சரவெடி: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்..!

Dinamani2f2025 03 232fpxamao7g2fgmu Si9aqaaiiet.jpg
Spread the love

சென்னை: ஐபிஎல் 3-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வீரர்கள் சென்னை அணியில் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய நிலையில், அணியின் ஸ்கோர் 10.3 ஓவர்களில் 87-ஆக இருந்தபோது நூர் அகமது பந்தை கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிஸ் செய்யவே அதை மின்னல் வேகத்தில் பிடித்து ஸ்டம்பிங் செய்து சூர்யகுமார் யாதவை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் சென்னை சூப்பர் கிங்ஸ் (இளம்)வீரர் எம். எஸ். தோனி.

42 வயதைக் கடந்துவிட்ட தோனியின் ஸ்டம்பிங்தான் இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டும் கிரிக்கெட் ரசிகர்களால் வியந்து பேசப்பட்டும் வருகிறது. ‘தல என்னைக்குமே தலதான்’ என்று சிலாகித்து பேசி வருகிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *