இந்நிலையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டின் விலை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், டிக்கெட்டானது சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.