ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாக்கள்: மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல்

Dinamani2f2024 11 212feu91t0q32fani 20241121045224.jpg
Spread the love

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் நாளை மறுநாள்(டிச. 16) தாக்கல் செய்யப்பட உள்ளது.

’ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம்’ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை தாக்கல் செய்வார்.

இந்த மசோதாக்களில் புதிதாக சட்டப்பிரிவு 82(ஏ) இணைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு 83, சட்டப்பிரிவு 172, சட்டப்பிரிவு 327-களில் திருத்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பாட்டு சட்ட வடிவம் பெற்றாலும், அடுத்த 10 ஆண்டுகள் கழித்தே, அதாவது 2034-ஆம் ஆண்டுதான் இந்தியா முழுவதும் ஒரே ஆண்டில் மக்களவைக்கும் அனைத்தும் மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *