கங்குவா 2-வது டிரைலர் தயார்!

Dinamani2f2024 11 022fo5j6wcdp2fscreenshot 2024 11 02 182356.png
Spread the love

சூர்யாவின் கங்குவா படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: தைரியமிருந்தால் நேரில் வா… திரை விமர்சகரை மிரட்டிய ஜோஜு ஜார்ஜ்!

இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் 1 நிமிடம் 33 விநாடிகள் கொண்ட இந்த டிரைலரை விரைவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *