கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

Dinamani2f2025 03 282fqpvrx3q52fe34a8406 C897 4638 8bdc 8d026cdf9c2f.jpg
Spread the love

அந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த பருவத்திற்கான தண்ணீரை அளிக்கும்படி ஆந்திர பொதுப்பணித் துறையினருக்கு தமிழக நீர்வளத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையேற்று கடந்த 23-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 300 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விநாடிக்கு 800 கன அடி திறக்கப்படும் நிலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீரை ஆந்திர-தமிழக நீர்வளத்துறையினர் மலர் தூவி வரவேற்றனர்.

ஜீரோ பாயிண்டில் இருந்து செல்லும் கிருஷ்ணா நீர் 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள  பூண்டி ஏரிக்கு நள்ளிரவுக்கு பின் வந்து சேரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: தவெக – திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *