பாராளுமன்ற தேர்தலில் இன்றுடன் 7 கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு முடிந்து உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அந்தந்த ஓட்டும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 4ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கருத்து கணிப்பு
பாராளுமன்ற தேர்தல்வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு பிரபல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
இதில் பெரும்பாலான கருத்துகணிப்பில் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக உள்ளது. பா.ஜனதாக சுமார் 350- தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணி 140 முதல் 200 வரையிலான இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கருத்து கணிப்பு முடிவுகள்.
எனினும் அனைத்து மக்களின் மனநிலை என்ன என்பது வாக்கு எண்ணிக்கை அன்றுதான் தெரியும்.கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக வந்து உள்ளதால் அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில்
தமிழகத்தில் பிரபல டி.வி. நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தி.மு.க.கூட்டணி கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது.
சிஎன்என் – நியூஸ் 18:
திமுக கூட்டணி: 36 – 39
அதிமுக கூட்டணி: 0-2
பாஜக கூட்டணி 1-3
இண்டியா டுடே:
திமுக கூட்டணி 26 -30
அதிமுக கூட்டணி 0 -2
பாஜக கூட்டணி 1 – 3
ஜன் கி பாத்:
திமுக கூட்டணி 34 – 38
அதிமுக கூட்டணி – 1
பாஜக 5+
ஏபிபி சி வோட்டர்:
திமுக கூட்டணி 37 – 39
அதிமுக கூட்டணி – 0
பாஜக கூட்டணி – 2
இந்தியா டுடே – ஆக்சிஸ்:
திமுக கூட்டணி – 33+
பாஜக கூட்டணி 2 முதல் 4.