நடப்பு ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை சர்க்கரையின் விலை வீழ்ச்சியடைவதையும் மற்றும் கரும்பு நிலுவைத் தொகை குவிவதைத் தடுக்க, 10 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்தது. அதே வேளையில் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.31 ஆக நிர்ணயித்தது.
இதனால் 99.9 சதவிகிதத்திற்கும் அதிகமான கரும்பு நிலுவைத் தொகை 2023-24ல் செலுத்தப்பட்டது. நடப்பு சர்க்கரை பருவம் 2024-25ல் மார்ச் 5, 2025 நிலவரப்படி 80 சதவிகிதத்திற்கும் அதிகமான கரும்பு நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
கரும்பு விவசாயிகளின் மொத்த நிலுவைத் தொகை ரூ.15,504 கோடியாகும். இது உ.பி.யில் உள்ள சர்க்கரை ஆலைகள் ரூ.4,793 கோடியும், கர்நாடகவில் ரூ.3,365 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.2,949 கோடியும், குஜராத்தில் ரூ.1,454 கோடியும் ஆகும்.
இதையும் படிக்க: ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!