கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

Dinamani2f2025 01 082fpg7ba0p72fvillupuram Child Septic Tank Edi.jpg
Spread the love

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது. இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்குச் சென்றிருந்தபோது கழிவறைத் தொட்டி மூடி உடைந்து உள்ளே விழுந்துள்ளார்.

குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை இன்று (ஜன. 8) விசாரித்த நீதிபதி மணிமொழி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாகக் கூறியிருந்தார். அதன்படி மாலையில் மூவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *