கவிஞர் பிரிதீஷ் நந்தி புதன்கிழமை(ஜன. 8) காலமானார். அவருக்கு வயது 73.
கவிஞராக மட்டுமல்லாது எழுத்தாளர், ஓவியர், படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரிதீஷ் நந்தி பத்திரிகைத் துறைக்கும் திரைத் துறைக்கும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் அனுபம் கெர் வெளியிட்டுள்ள பதிவில், எனது நெருங்கிய நண்பர் பிரிதீஷ் நந்தி மறைவுச் செய்தி ஆழ்ந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிதீஷ் நந்தி தொகுத்து வழங்கி, 1990-களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘தி பிரிதீஷ் நந்தி ஷோ’ நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இவரது தயாரிப்பில் வெளியான ‘காண்டே’, ‘ஜன்கார் பீட்ஸ்’, ‘சமேலி’, ‘ஹஸாரோன் க்வாஹிஷேன் ஏய்சி’ ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். ‘மாடர்ன் லவ் மும்பை’, ‘ஃபோர் மோர் ஷாட்ஸ்’ ஆகிய வெப் சீரிஸ் தொடர்களையும் தயாரித்துள்ளார்.