புதுதில்லி: மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 2) அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான ‘காந்தி ஜெயந்தி’ இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் “மதிப்பிற்குரிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன்.
மேலும் இதே நாளில் பிறந்த நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் மரியாதை செலுத்தினேன்.
தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் காந்தி, உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கின்றது.