கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

Dinamani2f2025 03 292f6slv2fm12findia Vs Brazil.jpg
Spread the love

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் லெஜண்ட்ஸ் மற்றும் பிரேசில் லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியைக் காண 20,000 பாா்வையாளா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காா், இரு சக்கர வாகனங்களில் வருவோா் பாா்க் சாலையில் வலதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான ‘பி’ மைதானம், ‘சி’ மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம்.

ராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்படும். அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலை, டவுட்டன், நாராயண குரு சாலை, சூளை நெடுஞ்சாலை, டெமெல்லஸ் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இதேபோல், எழும்பூா் ரயில் நிலைய பகுதியில் இருந்து வாகனங்கள் நேராக சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்று, பாா்க் சாலை இடதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புற வழியாக வாகன நிறுத்துமிடமான ‘பி’ மைதானம் மற்றும் ‘சி’ மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.

அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக, சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, ஈவெரா பெரியாா் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படும். அதேபோல ஜொ்மையா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை (வேப்பேரி காவல் நிலையம்) சந்திப்பிலிருந்து நேரு விளையாட்டரங்கு நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *