காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிப்பு

Dinamani2f2024 072f91580436 6ac3 4f12 9bdf 538f0b5e57b12f7ffe3397 3d1d 430a 8c72 5db10738bb8b.jpg
Spread the love

மேட்டூர்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கியது.

காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நவம்பர் 19 ஆம் தேதி வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை நீடித்ததால் டிசம்பர் 21 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்கு பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிககு 500 கனஅடியாக மீண்டும் குறைக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல உயரத்தொடங்கியது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

தற்போது பாசனப்பகுதிகளில் பெய்த மழை தனிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு பாசன தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 5,000 கன அடியாகவும், இரவு வினாடிக்கு 10,000 கனஅ டியாகவும் அதிகரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *