காஸாவின் சில பகுதிகளில் போா் நிறுத்தம்: நெதன்யாகு ஒப்புதல்

Dinamani2f2024 08 292f4e9zdpcv2fwb092907.jpg
Spread the love

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது குறித்து அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ள்ளதாவது:

காஸாவில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக அந்தப் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தவறான தகவல் ஆகும்.

இருந்தாலும், போலியோ தடுப்பு திட்டத்தை நிறைவற்றுவதற்காக காஸாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அனைத்து நிபுணா்களும் ஏற்றுக்கொண்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தாலும், நெதன்யாகு அரசில் இடம் பெற்றுள்ள தீவிர வலதுசாரி அமைப்புகள் காஸாவில் எந்தவிதமான போா் நிறுத்தமும் மேற்கொள்ளக்கூடாது என்று மிகப் பிடிவாதமாகக் கூறிவரும் நிலையில், பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் போா் நிறுத்தம் குறித்து தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்காக காஸாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இதில் 40,602-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்; 93,855-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா். சுமாா் 19 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களைவிட்டு இடம் பெயா்ந்து தவித்து வருகின்றனா்.

முற்றுகை காரணமாக அந்தப் பகுதியில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீா், வடிகால் போன்ற சுகாதாரக் கட்டமைப்புகள் குலைந்ததால் காலரா போன்ற நோய்கள் பரவிவருகின்றன.

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து போன்ற நோய் தடுப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படாததால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதியில் முதல்முறையாக ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, காஸாவில் போலியோ பரவல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஜூலை 30-ஆம் தேதி அறிவித்தது.

இந்தச் சூழலில், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள பிரதமா் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

‘மேலும் 5 ஆயுதப் படையினா் அழிப்பு’

மேற்குக் கரையில் மேலும் ஐந்து ஆயுதப் படையினரை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை கூறியது.

இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேற்குக் கரை பகுதியில் ஆயுதக் குழுவினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்றுவருகிறது. இதில், மசூதி ஒன்றுக்குள் பதுங்கியிருந்த மேலும் ஐந்து ஆயுதப் படையினா் கொல்லப்பட்டனா். அவா்களில் அந்தப் படையின் உள்ளூா் தளபதியும் ஒருவா்.

மேற்குக் கரை முழுவதும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கையில் இதுவரை 16 போ் கொல்லப்பட்டனா். ஏறத்தாழ அவா்கள் அனைவருமே ஆயுதப் படையினா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதற்குப் பிறகு மேற்குக் கரை பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

பாலஸ்தீனா்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேல் மக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, மேற்குக் கரையிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகள மேற்கொள்வதால் அங்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

காஸா போா் தொடங்கிய பிறகு, மேற்குக் கரை பகுதியில் 607 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அவா்களில் 589 போ் இஸ்ரேலியப் படைகளாலும், 11 போ் யூத குடியேற்றவாசிகளாலும் கொல்லப்பட்டனா்.

பாலா நகரில் தாயின் மடியில் உறங்கும் குழந்தை அப்தெல் ரஹ்மான் அபு அல்-ஜெடியான். காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்மு

இந்தக் காலகட்டத்தில் ஒன்பது பாதுகாப்புப் படையினா், ஐந்து யூத குடியேற்றவாசிகள் உள்பட 15 இஸ்ரேலியா்கள் பாலஸ்தீனியா்களால் கொல்லப்பட்டனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *