குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் ரக்ஷித் சௌரசியா (20). இவர் நேற்று முன்தினம் (மார்ச் 13) மாலை குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. காரை அதிவேகமாக ஓட்டிய இவர், கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார்.
கார் மோதியதில் வாகனத்தில் வந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய மாணவன் காரிலிருந்து வெளியே வந்து, ‘ஓம் நமசிவாய’ என்றும் ‘அடுத்த ரவுண்ட் போலாமா’ என்றும் சாலையில் நின்றுகொண்டு கத்தியுள்ளார்.
பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த மாணவரை அடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இவரது விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதற்கு கண்டனங்கள் வலுத்தன.