குட் பேட் அக்லி டீசர் சாதனை!

Dinamani2f2025 03 012fr1reijsq2fw2.png
Spread the love

குட் பேட் அக்லி டீசர் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று (பிப். 28) இரவு வெளியானது.

இந்த டீசரில் அமர்களம், பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால், எதிர்பார்த்ததைவிட குட் பேட் அக்லி டீசர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இதையும் படிக்க: தமிழில் பைரதி ரணகல்!

இந்த நிலையில், டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 3.1 கோடி (31 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

மேலும், நடிகர் அஜித் நடித்த படங்களிலேயே இதுவே மிக விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி பெற்றுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *