இந்தக் கும்பமேளாவில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக வர்த்தகமாகியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, காந்தம் மூலம் நாணயங்கள் சேகரிப்பு, வேப்பங்குச்சி விற்பனை செய்து ஓரிரு நாள்களில் 40,000-க்கும் அதிகமாக சம்பாரித்தது, ரூ.30,000-ல் ஹெலிகாப்டர் சேவை உள்ளிட்டவைகளும் மிகவும் பிரபலமாகின.
இந்த நிலையில் நூதன முறையில் ஒரு பதாகை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த பதாகையில், “144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு…! அந்த தெய்வீக கும்பமேளாவை அனுபவிக்கும் கடைசி வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். கும்பமேளாவில் புனித நீராட முடியவில்லையா? கீழ்க்காணும் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ரூ.500-உடன் உங்கள் புகைப்படமும் அனுப்பிவையுங்கள்.
உங்கள் புகைப்படத்தை நகல் எடுத்து புனித நீரில் நனைத்து, உங்களுக்கு புண்ணியம் கிடைக்க வழிசெய்வோம். உங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்துங்கள். நீங்கள் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். உங்கள் முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள். இந்தத் தருணம் உங்கள் வாழ்நாளில் மீண்டும் வராது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கும்பமேளாவில் புனித நீராடும் பெண்களை விடியோ எடுத்து, ஆபாச இணையதளங்களில் விற்பனை செய்த நிகழ்வுக்கு மத்தியில் இந்தச் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க… முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்த விராட் கோலி!