குற்ற செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை | dgp warns action against police officers who fail to prevent criminal activities

1355106.jpg
Spread the love

சென்னை: குற்றச் செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகீர் உசேன் 2 தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

இதேபோல் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான், ஈரோட்டில் காரில் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.

இக்கொலைகளுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டினர்.

இதுஒருபுறம் இருக்க, ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும். தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் டிஜிபி எச்சரித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *