குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் 3 வீரர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர், அரிகம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றதும், அவர்களை நோக்கி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.
ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வந்தேபாரத் விடியோவில் பெரு நாட்டின் ரயில்! வைரலானதும் பதிவை நீக்கினார்! ஆனால்..
இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் மற்றும் காவலர் ஒருவர் காயமடைந்தனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள அதிகம் தேவ்சர் பகுதியில் தொடங்கிய இந்த என்கவுன்டர் சனிக்கிழமை காலையும் தொடர்ந்தது.
இந்த என்கவுன்டரை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் மூன்றாம் கட்ட பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை தரப்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.