கேம் சேஞ்சர் அப்டேட்!

Dinamani2f2024 09 262frhc7z8h72fgyupdkrxgaa Pym.jfif .jpeg
Spread the love

நடிகர் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் – 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

முன்னதாக, தமன் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடலின் புரமோ வருகிற செப். 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடல்களைத் தொடர்ந்து விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படம் டிச. 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *