கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான்

Dinamani2f2024 08 262f7kow8pa22fkerala20governor20arif20mohammad20khan20edi.jpg
Spread the love

திருவனந்தபுரம்: கேளர ஆளுநராக தனது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தைவிட்டு வெளியேறிய ஆரிஃப் முகம்மது கான், “எனது இதயத்தில் கேரளம் மிகச் சிறப்பான இடத்தினைப் பெற்றிருக்கும். மாநிலத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்.” மேலும் மாநில மக்கள் தனக்கு அளித்த அன்பு, ஆதரவு மற்றும் அரவணைப்புக்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். மாநிலத்துக்கு எனது வாழ்த்துகள் என்றும் கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி கானுக்கு அதிகாரப்பூர்வமான வழியனுப்பு விழா நடத்தவில்லை.

ஆளுநருர் கானுக்கும், முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல்வரோ, அமைச்சர்களோ யாரும் அவரை பார்ப்பதற்கோ அல்லது முறைசாரா வழியனுப்பவோ வரவில்லை.

புது தில்லிக்கு புறப்படுவதற்கு முன், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், மாநில மக்கள் தனக்கு அளித்த அனைத்து அன்பு, அரவணைப்பு மற்றும் ஆதரவுக்கு மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். கேரள அரசு மற்றும் மாநில மக்களுக்கு எனது ‘வாழ்த்துகள்’ என்று கூறினார்.

“எனது பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், கேரளம் இப்போது எனது இதயத்தில் சிறப்பான தனி இடத்தினைப் பிடித்துள்ளது. கேரளத்துடனான எனது உணர்வுகள், பந்தத்துக்கு முடிவு கிடையாது. அது எனது ஆயுளுக்கும் தொடரும்.” என்றார்.

“பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் உள்பட பல்வேறு பிரச்னைகளில் இடதுசாரி முன்னணி அரசுக்கும் இடையே மோதல் போக்கால் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்தக் காலகட்டத்தில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. மாநில சட்டப்பேரவையால் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை மட்டுமே நான் செயல்படுத்தினேன். வேறு எந்தப் பிரச்னைகளிலும், எந்த மோதல் போக்கும் இல்லை. மேலும் மாநில அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மக்களின் நலனுக்காக பாடுபடும் என நான் நம்புகிறேன்” என கான் கூறினார்.

பதவிக்காலம் முடிந்து மாநிலத்தை விட்டு செல்லும் ஆளுநருக்கு மாநில அரசு முறையான வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தவில்லையே என்று கேட்டபோது, ​​​​முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்ற வழியனுப்பு விழாவை நடத்துவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறினார்.

மேலும் பதவியை நிறைவு செய்து கிளம்பும்போது அனைவரையும் பற்றி நல்லவிதமாக செல்லவே விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க | மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மீண்டும் நடை திறப்பு

கல்வியறிவு மற்றும் பொது சுகாதாரம் போன்ற துறைகளில் மாநிலத்தின் முன்னேற்றம் இங்குள்ள மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமைக்கு சான்றாகும்,” என்று கூறினார்.

பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழில்நுட்ப சிறப்பம்சம், உயர்கல்வி மற்றும் கலாசார பாதுகாப்பு போன்ற துறைகளில் கேரளா பெரும் முன்னேற்றத்தை அடைந்து நாட்டிற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் கான் வாழ்த்தினார்.

சமீபத்தில் மணிப்பூர், மிசோரம், கேரளம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

ஜனவரி முதல் வாரத்தில் பிகார் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்தார். கேரளத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்க உள்ளார்.

பல்வேறு விவகாரங்களில் ஆளுநருர் கானுக்கும், முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடா்ந்த நிலையில், புதிய ஆளுநர் அரசியலமைப்பு ரீதியாகவும், மாநில அரசுடன் இணக்கமாக செயல்படுவார் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது.

மேலும், கான் சங் பரிவாரின் திட்டங்களை அமல்படுத்த அரசியலமைப்புக்கு எதிரான முறையில் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *