இந்த தேர்தலில் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 941 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர். அவர்கள் 27 அரசியல் குழுக்களைச் சேர்ந்த சுமார் 600 வேட்பாளர்களில் 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் இதில் ஒரு சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொசோவோவில் 20 தொகுதிகள் அந்நாட்டின் சிறுபான்மனையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக 10 தொகுதிகள் செரிபிய சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளி நாடுகளில் வாழும் சுமார் 1 லட்சம் கொசோவோ நாட்டு குடிமக்களில் 20,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக உலகெங்கும் அமைக்கப்பட்டுள்ள 43 தூதரகங்களின் மூலம் வாக்களிக்கவுள்ள நிலையில் மீதமுள்ள வாக்காளர்கள் தபால் வாக்குகள் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு செரிபியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனிக்குடியரசாக உருவாகிய கொசோவோ நாட்டை ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 104 நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், கொசோவோவை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.