கோட் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!

Dinamani2f2024 08 212flvaoe5vq2fgvfruysw4aas9xt Cleanup.jfif .jpeg
Spread the love

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

செப்.5 ஆம் தேதி கோட் படம் வெளியாக உள்ளதால், இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டு விஜய் கதாபாத்திரங்கள், ஸ்டண்ட் காட்சிகள் என படத்தின் மீது ஆவல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடம் என தகவல் வெளியாகியுள்ளது.

கோட் போஸ்டர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *